பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்கான கன்னயஞ் செய்து விடல்

-திருக்குறள்; இன்னாசெய்யாமை : ! என்று சமுதாய நன்னிலைக்கு வழிகாட்டுகின்றார். சமுதாய உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய மற்றொரு அடிப்படைப் பண்பு ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கி உதவிப் பல்லுயிர் ஒம்புதல். இதுவே அறிவின் பயனாாகும்.

பகுத்துண்டு பல்லுயிரோம்புத னுலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை

-திருக்குறள்; கொல்லாமை : 2

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தந்தோய்போற் போற்றாக் கடை

-திருக்குறள்; இன்னாசெய்யாமை : 5

என்னும் குறட்பாக்களில் சமுதாய ஒருங்கிணைப்பின் உச்ச நிலையையே சுட்டிக் காட்டுகின்றார் திருவள்ளுவர். இவ்வாறு இன்றிச் சமூகச் சீரழிவுக்குக் காரணமாக அமைவனவற்றை, சமூக நோயாக அமைவனவற்றைக் குறிப்பிடும்போது,

காமம் வெகுளி மயக்க மிவைமூன்று நாமங் கெடக்கெடு நோய்

-திருக்குறள்; மெய்யுணர்தல் : 1.0 என்று காமவெறியும், வெகுளியும், மயங்க உயரும் மயக்க மும் சமுதாய நோய்கள் என்று சுட்டிக் காட்டுகின்றார். மயக்கத்தை நீக்கி.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

-திருக்குறள்; மெய் உணர்தல் : 5

என்றவாறு ஒரு பொருளின் இயல்பான தன்மையை உணர வேண்டும் என்று திருவள்ளுவர் விளக்குகின்றார்.