பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 9.3

ஒருவனுக்கு அமைய வேண்டிய உயரிய குணங்களை விளக்கும் திருவள்ளுவர்,

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டு முயர்வு. திருச் i. is 3

ருக்குறள்; மானம்

என்று பணிவு எல்லாவிடத்தும் எல்லார்க்கும் வேண்டும் என்று,வலியுறுத்துகின்றார்.

அன்புகா ணொப்புறவு கண்ணோட்டம் வாய்மையோ

டைந்து சால்பூன்றிய துாண்.

-திருக்குறள்; சான்றாண்மை : 3

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் , வாய்மை சான்றாண்மையின் துரண்கள் என்று விளக்கி அனைவரும் பெறவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார். இவை அமையப்பெற்றால் சமுதாயம் சிறப்பான நிலையில்

விளங்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஒவ்வொரு வருடைய வாழ்க்கைக்கும் பொருள் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, உணர்த்தும் திருவள்ளுவர்,

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.

-திருக்குறள்; பொருள் செயல்வகை 1

செய்க பொருளைச் செறுகர்செருக்கறுக்கு மெஃகதனிற் கூரிய தில்

-திருக்குறள்; பொருள் செயல்வகை 9

என்று பொருளின் இன்றியமையாமையை விளக்குகின்றார். ஆயின் அப்பொருளை எவ்வழியிலும் ஈட்டலாமா? கூடாது. நல்வழியில் ஈட்டி, தனக்கும் சமுதாயத்துக்கும் பயன்படு மாறு அப்பொருளைப் பயன்படுத்த வேண்டும். பொருள் ஒரு சிலரிடத்து மட்டும் குவியுமானால் அது பல தீமைகளை