பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

ஏற்படுத்திச் சமூக ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிச் சமுதாயப் பூசல்களை உருவாக்கிவிடும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்

கலந்தமை யாற்றிரிந் தற்று

-திருக்குறள்; பண்பு உடைமை : 1.0

அடுத்ததாகச் சமுதாயத்தைப் பிடித்துள்ள நோய்கள் மதுவும் விலைமகளும், சூதும் சாதிசமயப் பூசல்களும் முதலாயின. இவற்றை வன்மையாகக் கண்டிக்கும் திருவள்ளுவர்,

அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ரின்சொ லிழுக்குத் தரும்.

-திருக்குறள்; வரைவின் மகளிர் : 1

உட்கப் படாஅ ரொளியிழப்ப யெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார்.

-திருக்குறள், கள் உண்ணாமை : 1.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்

-திருக்குறள்: சூது : 4

என்னும் குறட்பாக்களில் அவற்றின் தீமையை விளக்கிக் காட்டுகின்றார். ஒருவன் உடல் நலத்தோடு வாழ்ந்தால் தான் தனக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்ய இயலும், நோயாளிகள் சமுதாயத்திற்குப் பெருஞ்சுமை. இதையுணர்ந்த திருவள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தைப் படைத்துச் சமுதாயச் சிறப்புக்கு வழிகாட்டுகின்றார். சமுதாயச் சீரழிவுக்கு முதற்காரணமாக அமைவது சாதி சமயப் பூசலாகும். மக்கள் ஓரினமாக வாழத் தடையாக இருப்ப வற்றை வெறுத்தொதுக்குக என அறிவுரை கூறும் திருவள்ளுவர்,