பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 95

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.

-திருக்குறள்; பெருமை : 2

என்று விளக்கிக் காட்டுகின்றார். தான் சமயப் பொதுவான கருத்துகளைக் கூறியதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கடவுளை முன்னிறுத்திக் கடவுள் வாழ்த்தை இயற்றாததன் மூலமும் தனது சமயப் பொதுவான நிலையை விளக்கிக் காட்டி யுள்ளார் திருவள்ளுவர்.

அனைவரும் பழிபாவங்களுக்கு அஞ்சி இருந்தால்தான் சமுதாயத்தில் குற்றங்குறைகள் இல்லாமல் இருக்கும். நானுடைமை என்னும் அதிகாரத்தில் பழிபாவங்களுக்கு அஞ்ச வேண்டியதன் இன்றியமையாமையைத் திருவள்ளுவர் பெரிதும் வலியுறுத்தியுள்ளார்.

பிறர்பழியுந் தம்பழியு நானுவார் நானுக் குறைமதி யென்னு முலகு

-திருக்குறள்; நாண் உடைமை : 5

என்னும் குறட்பாவில் பிறர் பழிக்கும் நானும் தன்மையை வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான பல அறக்கருத்துளைத் தனியொருவருக்குக் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

குடும்பம்

‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது தமிழ் முதுமொழி. இதுவே தமிழர்களின் வாழ்க்கைக் கோட்பா டெனலாம். அன்பு கொண்டு கருத்தொருமித்து ஒர் ஆணும் பெண்ணும் கூடி மக்கட்பேற்றுடனும் சுற்றத்தாரைப் போற்றியும் வாழும் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை. இந் நிலையில்தான் அன்பும் அருளும் மலர முடியும். ஒருவருக் கொருவர் பிணைப்பு ஏற்பட முடியும். மன அமைதியையும் சமுதாய ஒருமைப்பாட்டையும் சிறந்த குடும்பங்கள்தான்