பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

அளிக்க முடியும். இக்கருத்தையே திருவள்ளுவரும் பெரிதும் வலியுறுத்துகின்றார். இல்லறத்தின் சிறப்பு மனையாளின் அமைப்பைப் பொருத்தமைகின்றது. இதையே ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ என்னும் பழமொழி யும் உரைக்கின்றது.

மனைமாட்சி யில்லாள்க ரிைல்லாயின் வாழ்க்கை யெனை மாட்சித் தாயினு மில்.

-திருக்குறள்: வாழ்க்கைத்துணைநலம் : 2

என்று மனைச்சிறப்பு மனைவிச் சிறப்பு என்று பேசுகின்றது திருக்குறள். மனைவாழ்க்கையின் மாட்சிமை மக்கட்

பேற்றால் சிறப்புறுகின்றது.

மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு.

-திருக்குறள்: வாழ்க்கைத்துணைநலம் 10

என்று விளக்கும். திருவள்ளுவர், உலகத்துள் ஒவ்வொரு வரும் பெறத்தக்க பேறுகள் பலவற்றுள் சிறப்பாகவும் முதன்மையானதாகவும் இன்றியமையாததாகவும் விளங்கு வது மக்கட்பேறாகும் என்பதை,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற.

-திருக்குறள்; புதல்வரைப்பெறுதல் : 1

என்னும் திருக்குறள்மூலம் வலியுறுத்துகின்றார். மேலும் புதல்வரைப்பெறுதல் என்னும் அதிகாரக் குறட்பாக்களில் மக்கட்பேற்றினால் பெறும் இன்பத்தை விளக்கிக் காட்டு கின்றார். இவ் இல்வாழ்க்கையின் அடிப்படை அன்பும் அறனும் ஆகும்.