பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 97

அன்பிலா ரெல்லாங் தமக்குரிய அன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு.

-திருக்குறள்; அன்புடைமை : 2

என்று அன்பே அனைத்திற்கும் அடிப்படையாயமைவதை விளக்குகின்றார். மற்றொரு கடமை, சிறப்பு விருந்தோம்ப லாகும். விருந்தென்பது முன்னர் அறிமுகமானவர், அறிமுக மாகாதவர் என்று இருநிலைகளில் அமையலாம். இவ்விரு வகை விருந்தினரையும் போற்றி நிற்றலே இல்லறத்தின் பெரும் பயன்.

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

-திருக்குறள்; விருந்தோம்பல் : 1

என்பது வள்ளுவம். குடும்பத்திலும் வெளியிலும் இன்சொல் சொல்பவனாக, இன்முகம் உடையவனாக ஒவ்வொருவனும் விளங்கவேண்டும்; செய்நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்; நடுவுநிலைமை தவறாமல் பிறன்பொருளையும் தன் பொருளாகப் போற்றவேண்டும்; மெய், மொழி, மனம் தீநெறிக்கண் செல்லாது அடங்கும் தன்மையுடையவனாக விளங்குதல் வேண்டும்; தத்தமக்குரிய ஒழுக்கத்தினைப் போற்றி வாழ்பவராக அமைதல் வேண்டும்; பிறர்மனைவியை விரும்பாப் பேராண்மையுடன் விளங்கவேண்டும்; பொதுமை யுடையவராக விளங்கவேண்டும்; பிறர் ஆக்கம் , செல்வம் கண்டு பொறாமை கொள்ளலாகாது; பிறர்க்குரிய பொருளை வஞ்சத்தால் அடைய எண்ணக்கூடாது; ஒருவரைக் காணாத வழி அவரை இகழ்ந்துரைக்கக் கூடாது; தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்கள்ைச் சொல்லக் கூடாது; பழிபாவங்கள் செய்தற்கு அஞ்ச வேண்டும்; உலகத்தோடு ஒட்ட வாழவேண்டும்; வறியார்க்கு வழங்கும் வள்ளல்தன்மை வேண்டும்; புகழுடைய வராக வாழவேண்டும்? அருள் உடையவராக வாழவேண்டும்; ஊனுண்டலைத் தவிர்க்க வேண்டும் போன்றன. திருவள்ளுவர்

மண்.-7