பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

வலியுறுத்தும் நல்லறங்கள். ஒல்வொரு குடும்பமும் பல்கலைக்கழகமாக விளங்கவேண்டுமானால் மேற்கூறிய கருத்துகளை அனைவரும் பின்பற்றவேண்டும்.

திருவள்ளுவர் கூறும் துறவு இல்லிறந்து காடுசென்று கடுந்தவம் செய்யும் துறவல்ல, இல்லத்திலிருந்து நற்செயல் களைச் செய்து மக்கட்பேறடைந்து அ வ ர் க ைள ச் சான்றோராக்கி அவையில் முந்தியிருக்கச் செய்து நாள் தோறும் இயலும் வகையிலெல்லாம் சமூகத் தொண்டாற்றி, ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வதே திருவள்ளுவர் கூறும் துறவு.

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவ தெவன்.

-திருக்குறள்; இல் வாழ்க்கை :8

என்னும் திருக்குறள்,திருவள்ளுவரின் துறவுக்கோட்பாட்டை விளக்குகின்றதெனலாம். இல்வாழ்க்கை அதிகாரத்தில்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுங் தெய்வத்துள் வைக்கப் படும்

-திருக்குறள்; இல்வாழ்க்கை : 1.0 என்று கூறுவதன்மூலம் இல்வாழ்க்கையையே திருவள்ளுவர் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் துறவறவியல் தொடக்கத்தில் பரிமேலழகர் துறவறம் பற்றி விளக்கும் போது துறவறமானது மேற்கூறிய இல்லறத்தில் வழுவா தொழுகி அறிவுடையராய்ப் பிறப்பினைய ஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய் அறம்’ என்று குறிப்பிட் டிருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின்

-திருக்குறள்; கூடாஒழுக்கம் : 1.0 என்பன போன்ற குறட்பாக்களும் திருவள்ளுவரின் வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை, இல்லறமே நல்லறம்