பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 9 Q

என்னும் கருத்தை வற்புறுத்துவனவாகும். பாவேந்தர் பாரதிதாசன் இக்கருத்தை வலியுறுத்திக் குடும்பவிளக்கின் இறுதிப் பகுதியாக முதியோர் காதல்’ என்னும் பகுதியை வைத்துள்ளதும் இங்குச் சிந்திக்கத்தக்கது.

பல இடங்களில் திருவள்ளுவர் சமுதாயப் பழக்க வழக்கங்களைச் சுட்டிச் செல்கின்றார். சான்றாகக் குறியெதிர்ப்பை (திருக்குறள் ஈகை : 1) என்பதைக் குறிப்பிடலாம். குறியெதிர்ப்பை என்பதற்கு விளக்கம் தரும் பரிமேலழகர் அளவுகுறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது என்று கூறுகின்றார். இது போன்ற பல சமுதாய நிகழ்வுகளைத் திருவள்ளுவர் சுட்டிச் செல்கின்றார்.

அரசி

தனிமனிதர்களின் சேர்க்கை குடும்பமாகவும் , குடும் பங் களின் சேர்க்கை நாடாகவும் அமைகின்றது. நாட்டாட்சி நல்லதாக அமைந்தால்தான் மக்கள் நலமாக வாழ முடியும் தமிழக வரலாற்றில் முற்காலந்தொட்டு நிலையான ஆட்சி அமையாததால் ஏற்பட்ட குழப்பங்களும் இழப்புகளும் பல. இக்கால அரசியலில் நிலையான அரசாட்சி இல்லாத தால் பல நாடுகளில் ஏற்படும் பூசல்கள் நல்லாட்சியை வலியுறுத்தும் சான்றுகளாக அமைகின்றன. திருவள்ளுவர் பொருட்பாலில் அரசு பற்றி விரிவாகப் பேசிச் செல்கின்றார்.

அரசின் பண்புகள், அரசு நடத்துவார்க்கு வேண்டிய குணநலன்கள், அரசு அங்கங்களின் செயற்பாடுகள், அவர்தம் கடமைகள் போன்றன குறித்து விரிவாக விளக்கப்படுகின்றது. முடியாட்சி நடந்த காலத்துக் கருத்துகளே. எப்படியெனில் திருவள்ளுவர் அரசு வகை பற்றி விளக்காமல் அரசு நடாத்துவார் மாட்சி பற்றியே விளக்கியுள்ளார்.

சொல்வன்மை, வினைத்துாய்மை, அவையஞ்சாமை போன்றன. இன்றைய மக்களாட்சித் தத்துவத்திற்குப்