பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 00 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

பெரிதும் தேவைப்படுவன. இன்றைய அரசியல் துறையில் தேர்தலுக்கு முதன்மையான இடம் கிடைக்கின்றது. தேர்தலில்தான் யாருக்கு ஆட்சி என்பது நிச்சயிக்கப்படுகின் றது. அத்தேர்தலில் வெற்றி பெறத் தங்கள் கொள்கைகளை யும், வாக்குறுதிகளையும் வாக்காளர்களுக்குத் தெரிவிக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது சிறந்த சொற்பொழிவு வன்மையுடையவர்களே மக்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெற முடியும். அதுபோன்றே நாடாளுமன்றங் களிலும் சொல்வின்மையிருந்தால்தான் பேசி வா - முடியும். எனவே இன்றைய குடியாட்சி முறையில் பேச்சு வன்மையின் பங்கு முதன்மையானதாக அமைகின்றது. அரசு பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளவற்றுள் முத்தாய்ப்பாய் விளங்கும் சில கருத்துகளை இங்குக் காணலாம்.

அரசியலில் தலைமைக்கும் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டிய உறவை,

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

-திருக்குறள்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : 1

என்னும் குறள் மூலம் விளக்கிக் காட்டுகின்றார். அரசியலில் நட்புக்கு இன்றியமையாத இடம் உண்டு. பல நாட்டுடன் நல்ல நட்புக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்குப் பலவிதமான உதவிகள் கிடைப்பதோடு, அந்நாட்டின்மீது படையெடுக்கப் பிற நாடுகளும் அ ஞ்சும் . இதனால் விளையும் நன்மைகள் மிகப் பல. இதை,

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.

-திருக்குறள்: நட்பு : 1

என்று வலியுறுத்துகின்றார் திருவள்ளுவர். பெரியாரைப் பிழையாத தன்மை அரசியலில் வேண்டற்பாலது.