பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

2

“மலிதிரை பூர்ந்து தன்மண்கடல் வெளவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்'”

என வரூஉம் அடிகளும், டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர் களின் என் சரிதமும் கொண்டு கடல் கோளால்-புனலால் கொள்ளப்பட்ட நூல்கள் பல என உணரலாம்.

இன்று கிடைக்கும் நூல்களில் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆவது போல, சங்க இலக்கியங்கள் பழமையான இலக்கிய நூல்கள் ஆகின்றன. பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் என்பர். மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்” என்றதற் கேற்பத் திருமுருகாற்றுப்படை முதலாக மலைபடுகடாம் ஈறாக அமைந்த பத்துப் பாடல்களும் பத்துப்பாட்டாகும். நற்றிணை முதலாகப் புறநானூறு இறுதியாக அமைந்துள்ள எட்டு நூல்களும் எட்டுத்தொகை நூல்களாகும்.

மூன்று அடிகள் ஐங்குறுநூறு தொடங்கி 782 அடிகள் கொண்ட மதுரைக் காஞ்சி வரை இவற்றின் அடிவரை அமைகின்றன. 473 சங்கச் சான்றோர்கள் பாடிய இத் தொகுதியுள் 102 பாடல்களைப் பாடிய புலவர் தம் இயற் பெயர் அறியப்படவில்லை. காரணப்பெயரால் இவர்கள் அழைக்கப்படுவதனைக் காணலாம். பெண்பாற் புலவர்கள் முப்பதின் மரும், 25 அரசப் பெருமக்களும் இத் தொகுப்பில் கானப்பெறுகின்றனர். 2381 பாடல்கள் கொண்ட சங்கத் தொகை நூல்களில் 1862 பாடல்கள் அகம் பற்றியனவாகும். 47.3 சங்கச் சான்றோர்களில் 378 புலவர்கள் அகத்தினை பற்றிப் பாடிய புலவர் பெருமக்களாவர்.

அங்கவிலக்கியம் ஒரு வாழைத்தோட்டம் எனலாம். வாழைய’. வாழையென வந்த திருக்கூட்டத்து மரபினர் சங்கச் சான்றோர் ஆவர். தமிழின் பொற்காலம் எனச்