பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கார்நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள்

-

தோற்றுவாய்

ஒருவர் பேசும் முறை, அவர் மற்றவர்களோடு பழகும் விதம் , நடை உடை பாவனைகள், பழக்க வழக்கங்கள், பிறரோடு உரையாடும் உரையாடல் திறம், அவர்களைப் பற்றிய மற்றவர்கள் எண்ணம்-இவை அவர்தம் பண்புகளைப் பற்றி விளக்குவனவாக அமைகின்றன. நடைமுறை வாழ்க்கை யில் ஒருவரின் பண்புகளை அறிய இவை கருவியாக அமைவ தைப் போன்றே இலக்கிய உலகில் காணப்படும் பல்வகைப் பட்ட மாந்தர்களின் பண்புநலன்களைப் பற்றி அறிய இவை அளவுகோலாகின்றன. இந்த அளவுகோலை அடிப்படை யாகக் கொண்டு கார்நாற்பது காட்டும் தலைமகன் பண்பு களைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரை.

கார்நாற்பதில் தலைமகன்

கார்நாற்பதில் இடம்பெறும் நாற்பது பாடல்களில் 12 பாடல்கள் தலைமகன் கூற்றுக்களாக அமைந்தவை. இவற்றில் வினைமுற்றிய தலைமகன் நெஞ்சொடு கூறியதாக அமைந்தவை நான்கு பாடல்கள். வினைமுற்றிய தலைமகன் பாகனொடு கூறியதாக அமைந்தவை ஏழு பாடல்கள், வினைமுற்றி மீளும் தலைமகன் பாகனொடு கூறியது ஒரு