பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள் I 0.3

பாடல். இவை தவிர ஏனைய 28 பாடல்களும் தோழி கூற்றுகள். இத்தோழி கூற்றுக்கள் சிலவும் தலைமகன் பண்பு களை அறிய உதவுகின்றன. ஆக, கார்நாற்பதில் தலைமகன் வாய்மொழிகளும் தோழியின் வாய்மொழிகளும் அவன்தன் பண்புநலன்களைப் பறைசாற்றி நிற்கின்றன.

சமய அறிவு

தலைமகன் முதன்முதலில் பேசுகின்ற பேச்சே அவன்தன் இறையுணர்வைப் புலப்படுத்தி நிற்கிறது. செவ்விய தாளினை யும் பூஞ்சினைகளையுமுடைய வெண்கடம்ப மரங்கள் மலர்ந்த நிலையைக் கூற வருகின்றவன் அவற்றை நாஞ்சில் வலவனின் நிறத்திற்கு ஒப்புமைப்படுத்திப் பேசுகின்றான். இது அக்கடவுள் மாட்டு அவன்கொண்ட அன்பினைக் காட்டு வதாக அமைகிறது.

நாஞ்சில் வலவன் நிறம்போலப் பூஞ்சினைச் செங்கால் மராஅந் தகைந்தன

என்ற அவன் கூற்று அவன்தன் இறையுணர்வைப் புலப்படுத்து வதாக அமைகிறது.

விலங்கியல் அறிவு

கார் நாற்பது காட்டும் விலங்குகளின் செயலைப் பற்றி அறிந்த விலங்கியல் அறிவு மிக்கவனாகவும் காணப்படு கின்றான். இடியோசையால் நாகம் வருந்தும் என்பதை,

ஏறொடு அரு மணி நாகம் அனுங்க

என்ற கூற்றின் வழி வெளிப்படுத்துகின்றான். புல்லினை உண்கின்ற குதிரையின் தலையில் கவரிமான் மயிராற் செய்யப்பட்ட சாமரை எனப்படும் தலையாட்டம் அணியப் பெறும் என்பதை,