பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார் நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள் I 05

பொறிமாண் புனை திண்டேர்

என்ற பகுதியால் இதனை அறியலாம்.

வானியல் அறிவு

மேகமானது கடலினது நீரை முகந்து கொண்டு சென்று பின்னர் மலையிடத்தே பொழியும் தன்மை உடையது என்பதை,

கடனிர் முகந்த கமஞ்சூல் எழிலி குடமலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்

என்று கூறுகின்றான். மேலும்,

கார்ச்சேனிகந்த கரை மருங்கி னிர் சேர்ந்து

புலப்படுத்துவதாக அமைகிறது. மழை பொழியும் முறையினை இத் தலைமகன் கூற்று உணர்த்தி நிற்கின்றது.

என்ற தலைமகன் கூற்றும் அவன்தன் வானியல் அறிவைப்

இசை ஈடுபாடு

கார் நாற்பது காட்டும் தலைமகன் இசையில் நாட்டம் உடையவன் என்பதை அவன் கூற்றுக்களாலேயே தெளியலாம். காட்டினைப் பற்றி வருணிக்க வருகின்றவன்,

தங்காத் தகைவண்டு பாண்முரலுங் கானம் கெடா அப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற் படாஅ மகிழ்வண்டு பாண்முரலும் கானம்

என்றெல்லாம் காட்டில் வண்டுகள் இசையெழுப்பித் திரிதலைக் குறிப்பிடுவது அவன்தன் இசை ஈடுபாட்டினைப் புலப்படுத்துவதாக அமைகின்றது.