பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

இயற்கை ஈடுபாடு

பொதுவாகக் கார்நாற்பதில் இடம்பெறும் தலைமகன் கூற்றுக்களில் பெரும்பான்மையான பகுதி இயற்கையை வருணிக்கின்ற நிலையிலேயே அமைகின்றன. இயற்கையை அவன் புனைந்துரைப்பது அவன் இயற்கை ஈடுபாட்டினை அறிவுறுத்துவதாக அமைகிறது.

இமிழிசை வயணம் முழங்கக் குமிழின் பூப் பொன்செய் குழையிற் றுணர்துங்க

என்று கூறுவதும்,

சிரல்வாய் வனப்பின வாகி கிரலொப்ப ஈர்ந்தண் தளவந் தகைந்தன

என்று கூறுவதும் இயற்கையை மிக நுண்மையாக நோக்கும் தலைமகனின் இயல்பினை உணர்த்துகின்றன.

பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத் தகைவண்டு பாண்முரலும் கானம் பகைகொண்டல் எவ்வத் திசைகளும் வந்தன்று

என்று கூறுவதும் ,

வரை மல்க வான ஞ் சிறப்ப வுறைபோழ்ந் திருகிலம் தீம்பெயல் தாழ - விரை நாற ஊதை யுண்டு நறுந் தண்கா

என்று கூறுவதும் இயற்கையில் தோய்ந்த தலைமகனின் உள்ளத்து வெளிப்பாடுகளாகக் காணப்படுகின்றன.

புகழில் நாட்டம்

மண்ணியல் ஞாலத்து மன்னு புகழ் வேண்டித் தலைமகன் பிரிந்தான் என்ற தோழி கூற்றும், காட்டினை வருணிக்கின்ற நிலையில்,