பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள் I 0.7

கெடா அப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற் படாஅ மகிழ்வண்டு பாண்முரலும் கானம்

எனக் கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனத்தை உவமையாக்கி உரைப்பதும் புகழில் நாட்டம் கொண்ட தலைமகனின் நெஞ்சப் பிரதிபலிப்புகளாகத் துலங்கு கின்றன.

பழிக்கு அஞ்சும் பண்பினன்

வினைமுற்றிய தலைமகன் இமிழிசை வானம் முழங்குவ தாலும், குமிழின்பூப் பொன்செய் குழையிற் றுணர் தூங்குவ தாலும் கார் காலம் தோன்றிவிட்டமையை உணர்ந்த நிலை யில் தன் உள்ளம் கவர்ந்தவளின் ஊர்க்கு ஊரார் கூறும் வசைமொழி கெடும் வகையில் தான் செல்லும் வழியில் செவ்வியுடையதாகக் கூறுவது ப ழி க் கு நானும் பண்புள்ளதைப் படம் பிடிப்பதாக அமைகிறது.

இமிழிசை வானம் முழங்கக் குமிழின் பூப் பொன்செய் குழையிற் றுணர் தூங்கத் தண்பதஞ் செவ்வி யுடைய சுர நெஞ்சே காதலியூர் கவ்வை யழுங்கச் செலற்கு

என்ற தலைமகன் கூற்று இதனைப் புலப்படுத்துகிறது.

இகழுநகர் சொல்லஞ்சிச் சென்றார் வடுதல் பொய்யன்மை’ என்ற தோழி கூற்று பிறர் கூறும் பழிச்

சொற்கு நாணும் இயல்புடையவன் தலைமகன் என்பதை உணர்த்தி நிற்கிறது.

நினைத்ததை முடிப்பவன்

வீறுசால் வேர் தன் வினையும் முடிந்தன

என்ற கூற்று வந்த சாரியத்தை வெற்றியுடன் செய்து முடித்த தலைமகனின் பெ ருமிதத்தை வெளிப்படுத்தி