பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

நச்சியார்க் கீதலும் நண்ணார்த் தெறுதலும் தற் செய்வான் சென்றார் இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் நெடுவிடைச் சென்றார் செல்வம் தரல்வேண்டிச் சென்றகம் காதலர்

என்ற தோழியின் கூற்றுக்கள் வினையே ஆடவர்க்கு உயிரே என்ற கொள்கையை உணர்ந்த தலைமகனைகடமையைக் கண்ணெனக் கொண்ட தலைமகனை நமக்குக் காட்டுகின்றன.

சொற்றிறம்பாதவன்

கார் நாற்பது காட்டும் தலைமகன் சொன்ன சொல் தவறாதவன். கார்வானம் மெல்லப் பெயலைத் தோற்றி நிற்சவும், கல்லோங்கு கானம் களிற்றின் மதம் நாறவும் கார் காலம் வந்துவிட்டமையை உணருகின்றான் தலைமகன். உடனே அவனுக்குத் தன் தலைவிக்குக் கார்காலத்தில் வருதும் என மொழிந்துவந்த வார்த்தைகள் நினைவுக்கு வரத் தன் நெஞ்சை நோக்கி,

எல்லா வினையும கிடப்ப வெழு நெஞ்சே

எனக் கூறுகின்றான். வினையையே தன் உயிராகக் கொண்ட இத் தலைமகன் தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் பொருட்டு எல்லா வினையும் கிடப்ப, எழுகின்றான். இதனால் தலைமகனின் சொற்றிறம்பாமை புலனாகின்றதன்றோ? இவ்வாறே எருமையினது எழுச்சியை உடைய ஆண்மேகம் கரை மருங்கின் நீர்சேர்ந்து, எறியப்பட்ட மலர்களை சூடிக் கொண்டு போரின்கண் செம்மாந்து நிற்கும் மறவரைப் போல செம்மாந்திருக்கும் காலமே தன் தலைவிக்குத் தான் திரும்பி வருவதாகக் கூறிவந்த காலம் என்பதைப் பாகற்கு உணர்த்தித் தேரை விரைவில்