பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள் I 09

செலுத்துமாறு கூறுவதும் அவன் சொற்றிறம்பாமைக்குச் சான்று.

விருந்தில் விருப்பம்

வினைமுற்றிய தலைமகன் தன் காதலியுடன் விருந் தயரும் வழக்கத்தை,

வினைகலந்து வென்றிக வேந்தன் மனை கலந்து மாலை யயர்கம் விருந்து

எனக் குறிக்கின்றது குறள். இதற்கேற்பவே வினைமுற்றி மீளும் கார்நாற்பது தலைவனும் விருந்தயர்வதில் பெரு விருப்பம் உடையனாகத் திகழ்வதை,

சீர்த்தக்க, செல்வ மழை மதர்க்கட் சின் மொழிப்

பேதையூர்

நல்விருந்தாக நமக்கு

என்ற தலைமகன் கூற்றுப் புலப்படுத்தி நிற்கின்றது.

செல்வத்தில் ஈடுபாடு

பொதுவாகக் கார்நாற்பது பாடல்களில் தலைமகன் வினைமேற் சென்ற பிரிவைக் காட்டிலும் பொருள்மேற் சென்ற பிரிவே மிகுதியாகப் பேசப்படுகிறது. GT Gð) GðTLLI பிரிவைக் காட்டிலும் பொருள் காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்வதும் ஆங்காங்கே தம் கூற்றுகளில் செல்வத்தை உவமித்துப் பேசுவதும் செல்வத்தில் தலைமகன் கொண்ட ஈடுபாட்டை உணர்த்தி நிற்கின்றன.

இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் ... நச்சியார்க் கீதலும் கண்ணார்த் தெறுதலும் தற்செய்வான் சென்றார்