பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 0 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

புனர் தரு செல்வம் தருபாக்குச் சென்றார் செல்வம் தரல் வேண்டிச் சென்றநம் காதலர்

என்ற தோழியின் கூற்றுக்கள் பொருள் ஈட்டுவதில் தலைமகன் கொண்ட ஆர்வத்தினைப் புலப்படுத்தி நிற்கின்றன.

இனி கானகத்தில் பாண்முரலும் வண்டினுக்கு உவமை கூறுகையில்,

கெடா அப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல் படாஅ மகிழ்வண்டு பாண்முரலும்

எனச் செல்வர்களை உவமித்துக் கூறுவதும், தன் தலைவி யைப் பற்றிக் கூறுகையில்,

செல்வ மழைம தர்க்கட் சின்மொழிப் பேதை

எனக் கூறுவதும், காடுகள் பொலிவுற்றமைக்கு வளமுடையார் ஆக்கத்தை ஒப்புமைப்படுத்தி,

ங் 4 து து து நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார்

ஆக்கம்போற் பூத்தன காடு

எனக் கூறுவதும் செல்வத்தின்பால் தலைமகன் கொண்ட பற்றினைத் தெளிவுறுத்துகிறது. இவற்றால் செல்வத்தில் நாட்டம் மிக்கவன் தலைமகன் என்பதைத் தெளியலாம்.

நுண்ணிய நோக்கு

ஈர்ந்தண் புறவில் செம்முல்லைப் பூக்கள் பூத்து நிற்கும் நிலையை சிச்சிலிப் பறவையின் வாய்க்கு ஒப்பிட்டு உரைப்பதும், குமிழின் பூக்கள் பொன்னாற் செய்யப்பட்ட குழைகளைப் போலப் பூத்துக் குலுங்குகின்றன எனக்