பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் 3.

சங்க காலத்தைச் சொல்லலாம். காரணம் சங்ககாலத்தே தான் செறிந்த உயர்ந்த தமிழ் வழக்கில் இருந்தது. உயரிய உணர்வுகள், செறிவான கற்பனை, பொருத்தமான வடிவம் , விழுமிய கருத்துகள் இவற்றிற்கு இருப்பிடமாய்ச் சங்கப் பாடல்கள் துலக்கமுறக் காணலாம்.

எளிய சொற்கள் கொண்டு உயரிய பொருள்களை உணர்த்தி நிற்றல் சங்கச் சான்றோர் கவிதைகளின் சாரம் எனலாம். இதனாலன்றோ கவிச்சக்கரவர்த்தியாம் கம்ப நாட்டாழ்வார் கோதாவரி ஆற்றை வருணிக்கப் புகுங்கால் ‘ஐந்தினை நெறியளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை’ வீரர் கண்டார் என விளம்பலுற்றார்.

மலைநாட்டு மங்கை யொருத்தி, தன்மாட்டுத் தலைமகன் கொண்ட காதலின் எல்லையினைப் பின்வருமாறு குறிப்பிடு வாள்:

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே'9

என்பது எவ்வளவு எளிய சித்திரம்!

‘பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பனையே 10

என்பார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. அதற்கேற்ப ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் என்றால் உறையூர் போலப், பட்டினம் என்றால் அச்சொல் காவிரிப் பூம்பட்டினத் தையே குறிக்கும்.