பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள் I II

கூறுவதும் இயற்கையைக் கூர்ந்து நோக்கும் தலைமகனின்

நுண்ணிய நோக்கிற்குச் சான்றுகளாகும்.

சிரல்வாய் வனப்பின் வாஇ கிரலொப்ப ஈர்ந்தண் தளவர் த ைகந்தன குமிழின்பூப் பொன்செய் குழையிற் றுணர் தூங்க

என்பன அப் பகுதிகள்.

பிற பண்புகள்

தன் தலைமகனைப் பற்றி குறிப்பிடும்போது,

தொடிபொலி முன் கையாள் எனக் குறிக்கின்றான். தொடிபொலி முன்கை என்ற தொடரின்மூலம் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது தொடி’ என்பது பெறப்படுகிறது. இதனாலும், குமிழின்பூக்களுக்குப் பொன் செய் குழைகளை உவமித்துக் கூறுவதாலும் அணிகலனில் நாட்டம் மிக்கவன் தலைமகன் என்பது பெறப் படுகிறது.

ஐயந்தீர் காட்சி யவர் என்னும் தலைமகனைப் பற்றிய தோழி கூற்று தலைமகன் அறிவுடையவன் என்பதைப் புலப்படுத்துகிறது.

இன்சொற் பலவும் உரைத்துத் துறந்தார் என்றதனால் தலைமகன் இன்சொல் கூறுபவன். கடுஞ்சொல் கூறுபவன் அல்லன் என்பது பெறப்படுகிறது.

இளையரும் ஈர்ங் கட்டயர

என்ற தலைமகன் கூற்றினால் அவன்தன் சமுதாயச் சிந்தனையும் பெறப்படுகிறது.