பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

அகவாழ்வில் தலைமகன்

அகவாழ்வில் தலைமகன் நிலையினை நோக்கும்போது கருணை மறவனாகவும், கூடலில் விருப்பம் மிக்கவனாகவும், துன்பம் தீர்க்கும் துணைவனாகவும், தலைமகளைத் தன் நெஞ்சத் திரையில் எழுதி மகிழும் உள்ளத்தனாகவும் காட்சி அளிக்கின்றான்.

கருணை மறவன்

கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் செல்கின்றான் தலைமகன். கார்காலம் வந்து விடுகிறது. தலைமகன் இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் தலைமகளை நினைத்து,

பல்லிருங் கூந்தல் பணிநோனாள் எனவே எல்லா வினையும் கிடப்ப எழுநெஞ்சே எனக் கூறுவது தலைமகள் மாட்டு அவன் கொண்ட அன்பையும், இரக்கத்தையும் புலப்படுத்தி நிற்கிறது.

கூடலில் விருப்பம்

கார் காலம் தொடங்கிவிட்டது. நாஞ்சில் வளவன் நிறம்போலப் பூஞ்சினைச் செங்கால் மராஅந் தகைந்து விட்டன. இந்த நிலையில் தொடி பொலி முன்கையாள் தோள்களைத் துணையாக நாடுகின்றது தலைமகனின் உள்ளம். விழைந்த நிலையில் நெடிய விடையில் சென்று விடுகிறது.

■ ■ ■ ■ ■ ■ 劃 ........... பைங்கோற்

றொடிபொலி முன்கையாள் தோள் துணையா வேண்டி

நெடுவிடைச் சென்றதென் நெஞ்சு எனக் கூறுவது தலைமகளைக் கூடத் துடிக்கும் தலைமகனின் உள்ளத்தைப் புலப்படுத்துகிறது.