பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள் II 3

தலைமகளை நெஞ்சத்திரையில் எழுதியவன்

தலைமகளைப் பற்றித் தலைமகன் கூறுகின்ற சொற்கள் அவள் எந்த அள்விற்கு அவன் உள்ளத்தை ஆட்கொண்டிருக் கிறாள் என்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன.

தொடி பொலி முன் கையாள்

பல்லிருங் கூந்தல்

செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதை

நறுநுதல்

திருநுதல்

செல்வ மழைத்தடங்கண் என்றெல்லாம் தலைமகளைப் பற்றிக் கூறுவது தலைமகள் நினைவில் வாடும் தலைமகனின் உள்ளத்தைச் சித்திரிக் கின்றன.

அன்பு கெஞ்சத்தன்

1. காதலியூர் கவ்வை அழுங்கச் செலற்குச் சுரம் செவ்வியுடை யதாயிருக்கிறது எனக் கூறுவதும்.

2. பல்லிருங் கூந்தல் பணி நோனாள் எனக் கூறுவதும்,

3. சிறுமுல்லைப் போதெல்லாம் செல்வ மழைம தர்க் கண் சின்மொழிப் பேதை வாய் முள்ளெயிறு ஏய்ப்ப மலர்ந்தது என்று கூறுவதும் தலைமகளிடத்துத் தலைமகன் ೧T67- அன்பின் எதிரொலியாகத் திகழ்கிறது.

காதலர் நம்மை விட்டுப் பிரியமாட்டார் எனத் தோழி

தலைவிக்குக் கூறுவதும், தலைமகளிடத்துத் தலைமகன்

கொண்ட உயர்ந்த அன்பினைப் புலப்படுத்துவதாக அமைகிறது.

காதலர் தீர்குவரல்லர்

என்பது அப் பகுதி.

மண்.--8