பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி

_ - - -

முனனுரை

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம். அமிழ்தினும் இனிய தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் படைத்தது தமிழினம்.” ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் சங்க நூல்களும் தமிழரின் அழியாக் கருவூலங்கள். த மி ழ் ெமா ழி அறத்துடன் இயைந்தது. தமிழர் அறவாழ்க்கை மேற்கொண்டனர். சங்க நூல்களில் அறக்கருத்துகள் விரவிக்கிடக்கக் காணலாம். போரில் கூடத் தமிழர் அறங்காத்தனர்; அறப்போர் செய்தனர். பாண்டியன் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பாடியுள்ள புறப்பாடல் அக் காலத் தமிழரின் அறப்போர் முறையை விளக்கி நிற்கின்றது

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ திரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறம்”

சங்க காலத்தில் அறமுரைக்கும் அறநூல்கள் என்னும் தனிப்பிரிவு தோன்றவில்லை. காலப்போக்கில் அயல்