பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 6 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

இனங்கள் தமிழகத்தில் ஊடுருவின. தமிழர்களின் அறவாழ் விற்குக் கேடு நேர்ந்தது. இக் காலத்தில் அறம் கூறும் அறநூல்கள் தோன்றின. அவை, மக்களை நல்வழியில் ஆற்றுப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு அறமுரைத்தன. அந்நூல்களுள் கல்வி பற்றி ஆங்காங்கு விரவியுள்ள கருத்துக் களைச் சுட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கல்வி-விளக்கம்

கல்-வி-கல்வி. அறியாமை அகற்றிய பின் பெறப்படு தலே கல்வி. கல்லுதல் என்பதன் பொருள் தோண்டுதல். கலை எனும் வேரின் அடிப்படையில் கல்வி எனும் பண்புப் பெயர் தோன்றியது. கல்வி கல்லுதல் என்பது மனத்தைத் திருத்திப் பண்படுத்தலைக் குறிக்கும். கல்வி கற்பதன் நோக்கம் மனத்தில் புதைந்து இருக்கும் ஆற்றலை வெளிப் படுத்தல் ஆகும். கல்வி என்பது, ஒழுக்கம், பக்தி முதலிய வற்றை வளர்த்தல் வேண்டும் என்பார் காந்தியடிகள்.

இன்றைய வாழ்க்கையில் கல்வி பெறுதல் இன்றியமை யாத ஒன்று. பண்டைக் காலம் போன்ற கல்வி பெறும் முறைகள் இன்று இல்லை. கற்றல் என்பது இன்று வாழ்நாளில் ஒரு பகுதியாக மட்டுமே அமைகின்றது. இன்று வயிற்றினை வளர்க்கவும் வேண்டும்; வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ளவும் வேண்டும்; இவ்விரண்டையும் தந்துவுதவுவதே கல்வி ஆகும்.

வனப்பும் கல்வியும்

கல்வியை உடல் வனப்புகளை விடப் பெருமை உடையது என்று தமிழ் அற நூல்கள் கூறுகின்றன. கல்வி பயிலுவதால் அறிவு வளர்ச்சி அடைகின்றது. கல்வியே உயிர்க்கு அணிகலன். கல்விப் புலமையே நம்மை அணி செய்யும் அணிகலன். இவையன்றி ஆடை, அணிகலன் போன்ற புற அழகுச் சாதனங்களும், கண், தோள், முகம் போன்ற