பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்சள் காட்டும் தமிழர் கல்வி II 7

உறுப்புக்களின் அழகும் , மற்றும் ஏனைய ஒப்பனைகளும் நம்மை அழகுபடுத்தாது, கல்வி ஒன்றே அழகு தரும்.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் நடை வனப்பும் நாணின் வனப்பும்-புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு”

என்று ஏலாதியும் ,

குஞ்சி யழகும் கொடுந் தானைத் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு”

என்று நாலடியாரும் ,

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று”

என்று திருக்குறளும் கல்வியின் வனப்பை வலியுறுத்து கின்றன.

H. H. H. H. Ho ....நண்ணும் மறுமைக் கண்நலங் கல்வி

என்று திரிகடுகம் கல்வியை மறுமைப்பயன் அளிக்க வல்லது என்று கூறுகின்றது. நாம் உழைத்துத் தேடும் பொன், பொருள், ஆடை அணிகலன்கள் முதலான இன்பப் பொருள் கள் எல்லாம் இம்பிறவியில் மட்டுமே நம்முடன் தொடர்பு கொள்ளும் தன்மையின. ஆனால், நாம் பெறும் கல்வியறிவே பின்வருகின்ற பிற விகளிலும் நம்மைப் பாதுகாக்க வல்லது என்கின்றார் திருவள்ளுவர்.

ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற் கு எழுமையும் ஏமாப் புடைத்து"