பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 18 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

கல்வியின் சிறப்பு

தமிழ் அறநூல்களில் திருக்குறள், நாலடியார், திரிகடுகம் , ஏலாதி, சிறுபஞ்சமூலம் , முதுமொழிக் காஞ்சி, பழமொழி நானுாறு, நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது முதலான நூல்களும், நீதிநெறி விளக்கம், சதக இலக்கியங்கள், நன்னெறி, அறநெறிச்சாரம் மற்றும் ஆத்திசூடி முதலான ஒளவையாரது நூல்களும் கல்வியின் பெருமையை விரிவாகக் கூறுகின்றன. கல்வியின் சிறப்பை எடுத்தியம்பியும் கல்லாமையின் இழிவைக் கூறியும், கல்வியின் பெருமையைப் பெரிதும் வலியுறுத்துகின்றன.

கல்வியை, ஒருவனுக்குக் கற்புடைய மனைவியாகவும் கல்வியின் பயனாக விளையும் இனிய கவிதைகளைப் புதல்வர் களாகவும் உருவகப்படுத்தியுள்ளார் கு ம ர கு ரு ப ர ர். மனிதனுக்கு இல்வாழ்க்கைத் துணை இன்றியமையாத ஒன்று. அது போன்றே, கல்வியும் என்கின்றது குமரகுருபரர் இயற்றிய நீதிநெறி விளக்கப் பாடல்.

கல்வியே கற்புடைப் பெண்டிர் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே தீங்கவி......”

மதம் பிடித்து முறை தவறி நடக்கும் யானையைப் பாகன் அடக்குவான். அதுபோல், மடம் கொண்டு நெறி

தவறும் மனித இனத்தைக் கல்வி திருத்தவல்லது. இது குறித்தே பெரியோர்கள் கல்வியை யானைப் பாகனாக

உருவகம் செய்துள்ளனர்.

கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி9

என்னும் மணிமேகலை அடியாலும்,