பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி 119

இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படா அது ஓங்கா உள்ளத் தோடு மாயினும்”

என்னும் சிலப்பதிகார அடிகளாலும் அறியலாம்.

சிலம்பும் மேகலையும் கல்வியை யானைப் பாகனாக உருவகம் செய்துள்ளது போலவே, நான்மணிக் கடிகை கல்வியை விளக்காக உருவகம் செய்துள்ளது. எரியும் விளக்குத் தன்னையும் விளக்கும், ஏனைய பொருள்களையும் விளக்கும். அதுபோல் கல்வியும் தன்னையும் விளக்கித் தம்மைச் சார்ந்தோரது புகழையும் விளக்கி நிற்கின்றது. இதனை,

மனைக்கு விளக்க மடவார் மடவார் தமக்குத் தகைசால் புதல்வர்-மனக்கினிய காதற் புதல்வர்க்கும் கல்வியே கல்விக்கும் ஒதிற் புகழ்சா லுணர்வு’

என்னும் நான்மணிக்கடிகைப் பாடலாலும் ,

இம்மை மயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம் காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து’

என்னும் நாலடியார்ப் பாடலாலும் அறியலாம்.

கல்வி கற்றவர் எத்திசைச் சென்றாலும் அவர்க்குச் சிறப்பே. எல்லா மக்களும் அவரது உறவினரே. எல்லா நாடும் அவரது நாடே. இது பற்றியே திருவள்ளுவர்,

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு: