பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

என்று வினவுகின்றார். சிறுபஞ்சமூலம் கற்றவர்களைத் தேவர்களுடனும் கல்லாதவர்களை நரகர்களுடனும், ஒப்பிடு கின்றது.

தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால் பூதரே!

கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே எங்குச் சென்றாலும் உணவு அளிக்கும். அவர்கள் தமது பயணங்களில் கட்டுச் சோறு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லா நாடில்லை அந்நாடு வேற்றுநா டாகா: தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில்”

என்று பழமொழி நானுாறு குறிப்பிடுகின்றது. இவண்,

மன்னனும் மாசறக் கற்றோனுங் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னர்க்குத் தன்தேச மல்லா ற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு:ே

என்னும் ஒளவையார் கூற்றும் நோக்கத்தக்கது.

கல்லாமையின் இழிவு

தமிழ் அறநூல்களுள் தலையாய அறநூலான திருக்குறள் கல்வி என்னும் தலைப்பின்கீழ், கல்வியின் சிறப்பை உடன்பாட்டான் விளக்கி நிற்கின்றது, அது

போலவே கல்லாமை” என்னும் தலைப்பின்கீழ் எதிர்மறை யானும் கல்வியின் சிறப்பை, வலியுறுத்துகின்றது. இவ்வாறு, ஏனைய நூல்களும் கல்லாமையின் இழிவை இயம்புகின்றன. திருவள்ளுவர் கல்வி கல்லாதவர்களை விலங்குகளுடன் ஒப்பிடுகின்றார். அவர் முகத்திலிருப்பது கண்கள் அல்ல