பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

‘முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே’.

என்று கூறிச் செலவழுங்க முற்படுமுகத்தான் தன் காதற் பெற்றியைக் கட்டுரைத்த தலைமகனைப் பட்டினப்பாலை பகரும் , ‘ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கை யும் வேண்டலன் யானே’ என்று காதல் மாட்சியைக் கட்ட விழ்த்து நிற்கும் குறுந்தொகை காட்டும் தலைவனைக் 9. Пго ЛГ5.

சங்கச் சான்றோர் கற்பனை விழுமியது. அவர்கள் பாட்டில் உள்ளது.புனை தலைக் காணலாம் ; இல்லது புனைதல்-மகளிர் அழகை-உறுப்புநலன்களை வருணிக்க முற்பட்டாலுங்கூட அதில் வெறுக்கத்தக்க வருணனையைப் புகுத்தாமல் மனங்கொளத்தக்க வகையில் அளவோடு அமைந்த வருணனை காணலாம்.

“பூவொடு புரையுங் கண்ணும், வேயென

விறல்வனப் பெய்திய தோளும், பிறையென மதிமயக் குறுஉ றுதலும்’

என்று வருணனை காண்க. ஆற்றுப்படை நூல்களில் விறலியரைப் பற்றி முடிமுதல் அடிவரை வருணனை அமைந் திருந்தாலுங்கூடப் பெரிதும் வெறுக்கத்தக்க அளவிற்கு வருணனை இல்லை மேலும் கற்பனையில் இயல்புகற்பனை யென்றும் , நினைவுக் கற்பனையென்றும் , கருத்துவிளக்கக் கற்பனை என்றும் காணும் மூவகைக் கற்பனைகளுக்கும் ஏற்பக் கற்பனைகளைச் சங்க இலக்கியங்களில் காணலாம். புறத்தே ஒரு காட்சி வழங்கினும் ஆழ்ந்து நோக்கினால் ஒர் உட்போருள் அமையும் உவகை கொண்டு உயர்பொருளை விளக்கும் திறனையும் சங்கச் சான்றோர் வாக்கிற்

காணலாம்.