பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி 121

புண்கள் என்றும் கூறுகின்றார். கல்லாதவர் இயற்கை அறிவுடையவராக இருப்பினும் அதனை அறிஞர் ஏற்க மாட்டார். இதனை வள்ளுவர்,

கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடை யார்’

என்கின்றார். இவண்,

கல்லா தான் கண்ட கழிநுட்பம் கற்றார் முன் சொல்லுங்கால் சோர்வு படும்:

என்னும் பழமொழி நானுாறு கூறுவதும், இவண்,

கல்லாதான் தான்காணும் நுட்பமும் கல்லார்கள் கேட்பின் நகைச்சி

என்னும் சிறுபஞ்சமூல அடிகளும்,

கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா’

என்னும் இன்னாநாற்பது அடியும் சிந்தித்தல் நலம்.

கல்லாத ஒருவன் முதலில் தனக்கே பகைவன் ஆகின்றான். அவன் நல்வினைப் பயனால் உழைத்துப் பொருளைக் குவித்தாலும் அவற்றைத் துய்த்து மகிழவும் அவனால் முடியாது. இத்தகையவனுடைய செல்வத்தைவிட அறிஞர்களின் வறுமை பன்மடங்கு உயர்ந்தது என்கின்றது

திருக்குறள்.

-

~

நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார் கண் பட்ட திரு’

கல்வியறிவில்லாத மக்களைச் சார்ந்தால் பாவம், பழி பகை, சேடு, அச்சம் முதலிய தீய பண்புகள் இம்மை, மறுமை ஆகிய இருநிலைகளிலும் சாபம்போல் சென்று