பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

அடையும் என்று ஏலாதி கூறுகின்றது. மேலும், அவர்களது

வாய்ச்சொற்கள் வழியே அவர்கள் இடர்ப்படுவர்.

கல்லா ஒருவர்க்குத் தம்வாயின் சொற்கூற்றம்2

என்று நான்மணிக்கடிகை சுட்டுகின்றது.

வாழ்க்கையில் இன்னல்கள் எதிர்ப்படுதல் என்பது இயற்கை. கல்வி அறிவுள்ளவர்கள் தமது தெளிந்த சிந்தனையால் அவற்றை எதிர்நோக்குவர். இடும்பைக்குக் கலங்காமல், இன்பமே, எந்நாளும் துன்பம் இல்லை என்று வாழ்வர். ஆனால் கல்வி அறிவில்லாதவர் இன்னல்களைக் கண்டு கலங்குவர்; ஊக்கம் இழப்பர்; அவற்றை எதிர்நோக்க வழி தெரியாமல் திணறுவர். ஒருவேளை, கற்றவர்கள் தளர்ந்து போனாலும் மீண்டும் கிளர்ந்து எழுவர். ஆனால் கல்லாதவர் சிக்கித் தவிப்பர். இதனை,

கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத பேதையான் வீழ்வானேற் கால் முரியும்?

என்னும் நான்மணிக்கடிகை அடிகளால் அறியலாம்.

இளமையில் கல்வி

கல்வி கற்றவர்களுக்கு ஏற்ற பருவம் இளமைப் பருவமே. தாய் தந்தையரின் அரவணைப்பில், உலகத் துன்பங்கள் அண்டாத இளமைப் பருவமே கற்கச் சிறந்த பருவம் ஆகும். மேலும், மனித மூளையின் அமைப்பும் கல்வி பயில அப்பருவத்தில் பெருந்துணை செய்கின்றது. இளமை யில் கல்வி சிலையில் எழுத்து.’ ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ போன்ற முதுமொழிகளும் இளமை யில் கற்க வேண்டியதின் அருமையை உணர்த்துகின்றது. இதனைப் பின்வரும் பழமொழி நானுாறு தெளிவுடன் விளக்குகின்றது.