பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி I 23

ஆற்றும் இளமைக் கண் கற்கலான் மூப்பின் கண் போற்றும் எனவும் புனருமோ? ஆற்றச் சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை மரம் போக்கிக் கூலிகொண் டார்?

சுங்கத்தீர்வை வசூலிக்கின்றவர், சாவடியைக் கடப்ப தற்கு முன்னரே அதனை வசூலித்தல் வேண்டும். அங்ஙனமே தோணி ஒட்டுபவர், பயணிகளை அக்கரையில் சேர்ப்பதற்கு முன்னரே தமக்குரிய கூலியைப் பெறுதல் வேண்டும். சுங்கச் சாவடியைக் கடந்த பின்னர் தீர்வை பெறுதல் என்பது இயலாது. அவ்வாறே கற்பதற்கு ஏற்ற இளமைப் பருவத்தை வீணே கழித்து விட்டுப் பின்னால் கற்க இயலாது.

உலகில், உள்ள குற்றங்களுள் இளமையில் கல்லா திருப்பதும் ஒன்று. இதனை,

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்” என்னும் நான்மணிக்கடிகை அடி உணர்த்தி நிற்கிறது. இளமையில், பல நூல்களை நாடிக் கற்காத மூத்த மகன் அவனது தந்தையை அட்டமத்துச் சனியாகத் துன்பப் படுத்துவான் என்கின்றார் ஒளவையார்.

கல்வியின் வகைகள்

இன்று கல்வியிற் பல பிரிவுகள் உள்ளன. ஆனால் இன்றுள்ள அனைத்துப் பிரிவுகளும் அன்றைய கல்வி முறை யில் இல்லை. இன்று கலைகளையும் கல்விப் பிரிவின் கீழ் அடக்குகின்றனர். பழந்தமிழகத்தில் எண், எழுத்து என்றிரு பிரிவுகள் இருந்ததைத் திருக்குறள் வழி அறிய முடிகின்றது.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு:

இக்குறட்பாவுக்கு எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய