பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 24 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

நூல்களுட் காண்க. எழுத்தெனவே அதனோடு ஒற்றுமை

யுடைய சொல்லும் அ ட ங் கி ற் று என்று உரை கண்டுள்ளார்.” இது பற்றியே எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எ ன் று கொன்றைவேந்தன்28

கூறுகின்றது. எண், எழுத்து என்னும் இரண்டு பிரிவுகளை மேலும்,

கண்ணுங்காற் கண்ணும் கணிதம் எழுத்து”

என்னும் சிறுபஞ்சமூல அடியாலும்,

......... எண்ணொடு

எழுத்தின் வனப்பே வனப்பு”

என்னும் ஏலாதி அடியாலும் அறியலாம். இவண்,

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர்’

என்னும் அப்பரடிகள் வாக்கையும்,

அண்ணலும் நூலும் பொருளும் நிகழ்வும் இவை எனலும்

எண்ணினும் ஏனை எழுத்தினும் மிக்காய் இருந்தவர்.32 என்னும் நீலகேசி அடியையும்.

எண்ணெழுத்து இகழேல் என்னும் ஆத்திச்சூடியையும் ஒப்பு நோக்காலம்.

கேள்விக் கல்வி

கல்வி, கேள்வி வழியும் பெறப்படும். அறிவு கல்வியால் விளக்கமுறும். கல்வி கேள்வி வழியே பழங்காலத்தில் பெரிதும் அளிக்கப்பட்டு வந்தது. கேள்வியும் ஒருவகைக் கல்வியே. இதனைக்