பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி I 25

கேள்வியும் கல்வி ஆகும்:

என்னும் திவாகர நிகண்டு நூற்பா உணர்த்துகின்றது. திருவள்ளுவர் கேள்வி’ என்று ஒர் அதிகாரத்தையே அமைத் துள்ளார்.

பரிமேலழகர், கல்லாத வழியும் கேள்வியால் கல்வி யறிவை உண்டாக்கலாம் என்பர். திருவள்ளுவர், ஒருவன் கற்கவில்லை எனினும் வருந்த வேண்டாம் . அவன் முயன்றால் கேள்வி வழியே அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம் என்கின்றார். இதனை,

கற்றிலன் ஆயினும் கேட்க...”

என்னும் திருக்குறள் உணர்த்துகின்றது.

பழமொழி நானுாறு ஒருபடி மேலே சென்று கற்றலை விடக் கேள்வி வழி பெறும் அறிவே சிறந்தது என்கின்றது. இதனைக்,

கற்றலின் கேட்டலே நன்றுே

என்னும் பழமொழி நானுாற்றின் அடி விளக்குகின்றது. திருஞானசம்பந்தர் கல்வியறிவுடன் கேள்வியறிவும் வாய்க்கப் பெற்றவர்களே பெரியோர் என்று கூறுகின்றார்.

கற்றல் கேட்டல் உடையார் பெரியார்?

என்பது சம்பந்தர் தேவாரம்.

கல்லாத ஒருவன் கற்றாரைச் சேர்ந்து வாழ்ந்தால் அவனும் நாளடைவில் அறிஞனாவான். கற்றவர் கூறும் கேள்விப் பொருளைச் செவிமடுத்துச் செவிமடுத்துக் கல்லாத வனும் அறிவு விளக்கம் பெறுவான். இதனைக்,