பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி 127

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட் படுமே!’

என்னும் புறப்பாடல் அடிகளும் ஆராயத்தக்கன.

நவமணிகளுள் ஒன்றாக மாணிக்கம் என்னும் உயர்ந்த மணி நஞ்சுடைய நாகத்தினின்று பிறக்கின்றது. நச்சுப் பாம்பின் வழிவந்த விலையுயர்ந்த மணியை உலகம் போற்றிப் பாராட்டுகின்றது. விளைந்த இடம் பாராமல் அணிந்து மகிழ்கின்றனர். உலக மக்கள் ஆயினும் திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டு தேவர்களும் கூட அஞ்சினர். உயர்ந்த பாற்கடலில் தோன்றிய காரணத்திற்காக நஞ்சை மக்கள் ஏற்ற முன்வரார். அது போன்றே தாழ்ந்த குலத்தில் தோன்றிய ஒருவனது கல்வி நலத்தை மகிழ்ந்து ஏற்பர். உயர்ந்த குலத்தில் உதித்தோரது கல்லாமையை நகைப்பர். அறிவைக்கொண்டே மக்கள் பிறப்பில் உயர்வு தாழ்வு கூற வேண்டுமே அன்றிப் பிறப்பைக் கொண்டு அல்ல என்கின்றார் துறை மங்கலம் சிவப்பிரகாச அடிகள்.

ஆக்கும் அறிவான் அலது பிறப்பினான் மீக்கொள் உயர் விழிவு வேண்டற்க நீக்கு பவரார் அரவின் வருமணிகண் டென்றும் கவரார் கடலின் கடுகி

தோணியைச் செலுத்துபவன் தாழ்ந்த இனத்தவன் என்று உலக மக்கள் அவனை இகழார். மேலும் அவன் துணையால், அக்கரையையும் அடைவர். அது போன்றே கல்வியறிவு உடையவரிடம் சாதி வேறுபாடுகளைப் பாராட்டாமல், அவரது துணையைப் பெற்று வாழ்தல் வேண்டும், என்று நாலடியார் வலியுறுத்துகின்றது.4