பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 28 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

இரங்தும் கற்க

இரத்தல் என்பது மிகவும் கொடியது. பிறரிடம் தன்மானம் இழந்து கைகட்டி, வாய்மூடி நின்று இரத்தலை விட இழிசெயல் வேறொன்றும் இல்லை. திருவள்ளுவர், ஒளவையார் போன்ற புலவர்கள் இரத்தலின் இழிவு பற்றி விவரித்துள்ளனர்.

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்க்க

என்பது திருக்குறள். நான் என் பொருட்டு எதையும் இரக்க வில்லை. பசுவின் பொருட்டு இரந்தேன். அதுவும் தண்ணிர் மட்டும் தான் இரந்தேன், என்று ஒருவர் கூறி இரப்பாரே யானால் அதுகூட இழிவே என்கின்றார் திருவள்ளுவர்.

இங்ஙனம் இரத்தலைப் புலவர் உலகம் கடிந்தது. ஆயினும் கல்வியின் பொருட்டு இரத்தலை அவர்கள் வெறுக்கவில்லை, மாறாக வரவேற்றனர். பிச்சை எடுத்தா யினும் கல்வி பயிலுக என்றே வலியுறுத்தினர். சங்க காலத்தில், மாணாக்கர்கள் இரந்தும் கல்வி பயின்றனர்.

அன்னா இயிவனோர் இளமா னாக்கன்

தன்னுார் மன்றத்து என்னன் கொல்லோ

இரந்துாண் கிரம்பா மேனியொடு

விருந்தி னுTரும் பெருஞ்செம் மலனே46 என்னும் குறுந்தொகைப் பாடலின்கண் இடம் பெற்றுள்ள ‘இரந்து ஊண் நிரம்பாமேனி’ என்னும் அடி, சங்க காலத்தில் இரந்தும் கூடக் கல்வி கற்றனர் என்னும் குறிப்பை உணர்த்து கின்றது.

இனியவை நாற்பது பிச்சை எடுத்தேனும் கற்க என்று கூறுகின்றது. மேலும் அங்ஙனம் கல்வி பயிலுதல்