பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி I 29

மிகவும் இனிமையானது என்றும் சுட்டுகின்றது. இக் கருத்தைப்,

பிச்சை புக்காயினும் கற்றல் மிகவினிதே47

என்னும் இனியவை நாற்பது அடி உணர்த்துகின்றது. அதிவீரராம பாண்டியன் இக்கருத்தை,

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே48

என்று கூறுதல்வழி வலியுறுத்துகின்றார்.

செல்வர்கள், சமுதாயத்தில் கற்க வாய்ப்பின்றி வாடும் வறிய மாணவர்களுக்கு உணவு, உடை, புத்தகம், எழுதுகோல் முதலானவற்றை வழங்கி அம் மாணவர் கல்வி பெற உதவினர் என்னும் கருத்தை ஏலாதிப் பாடல் ஒன்று உணர்த்து கின்றது.

ஊனொடு கூறை யெழுத்தாணி புத்தகம் பேனொடு மெண்ணும் எழுத்திவை மானொடு கேட்டெழுதி யோ திவாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து49

ஆசிரியர் மாணாக்கர் இலக்கணம்

பண்டைத் தமிழகத்தில் குருகுலக் கல்வி முறையே இருந்தது. ஒரு குறிப்பிட்ட வயதுவரை மாணவர்கள் ஆசிரியர் இல்லத்திலே தங்கி, அவரோடு உடன் உறைந்து கல்வி பயிலுவர். அக்காலத்தில் சமுதாயத்தில் ஆ சி ரி ய ப் பெருமக்கள் பெரிதும் போற்றப்பட்டனர். திரிகடுகம் , ஆசிரியர் இல்லாத (அ) வாழாத ஊர் பயனில்லாத வர் என்று குறிப்பிடுகின்றது. இதனைக்,

பண்.-9