பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

கணக்காயர் இல்லாத ஊரும். நன்மை பயத்தல் இல”

என்னும் திரிகடுக அடிகளால் அறியலாம் .

கல்வி கற்பிக்கும் ஆசிரியனை இறைவனுக்கு நிகராகத் தமிழர் போற்றினர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்பது வெற்றிவேற்கை. தமிழ் அறநூல்கள் குருவழிக் கற்றலை வரவேற்கின்றன. குருவின்றிக் கற்ற வித்தையால் பயன் இல்லை” என்று குமரேச சதகம் இயம்புகின்றது. கற்பிக்கும் ஆசிரியருக்குரிய ஊதியத்தை அவ்வப்போது அளித்துவிடல் வேண்டும் என்கின்றது

உலகநீதி.ே

நூல் கற்பிக்கும் ஆசிரியரது இலக்கணங்களை நன்னூல் தெளிவுறுத்துகின்றது:

குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோள் மலர்நிகர் மாட்சி உலகியல் அறிவோ டுயர்குணம் இனையவும் அமைபவன் நூலுரை யாசிரி யனன்னே!ே

என்று பவணந்தி முனிவர் நல்லாசிரியர் பண்புகளைக் குறிப்பிடு வதுடன் ஆசிரி யர் அல்லாதார் பண்புகளையும் சுட்டுகின்றனர். ஆசிரியர் பிரம்மச்சரியம் காப்பவராக இருத்தல் வேண்டும்.

ஆணாக்கம் வேண்டா தான் ஆசான்...” என்பது சிறுபஞ்சமூலம் கூறும் செய்தி.

ஆசிரியர் என்பவர் நூலை மட்டும் கற்பிக்கின்றவர் என்று தமிழ் மக்கள் கருதினர் அல்லர். வாழ்க்கை வழிகாட்டியாகவும் , பிறவிப் பிணிப்பை நீக்கும் ஆன்ம குருவாகவும் கருதிப் போற்றினர். நம் தமிழ் மக்கள்