பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம்

5

“கழனி மாஅத்து விளைந்துகு தீம்பலும்

பழன வாளைக்கது.உ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மில் o கையும் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுங்தன் புதல்வன் தாய்க்கே”

ஈண்டுக் கழனி தலைமகள் வாழும் ஊராகவும், மாமரம் கலைமகளாகவும், தீம்பழம் தலைமகனாகவும், பழனம் பரத்தையர் சேரியாகவும், வாளைமீன் பரத்தையாகவும் கொள்ளுமிடத்து விளையும் உட்பொருள் உற்றுணரற்பாற்று. கதிரவனைக் கண்டு தாமரை மலர்கள் தலையவிழ்வதும், நிலவுகண்டு அல்லி மலர் அலர்வதும் இயற்கை. கதிரொளி யில் அலரும் தண்டாமரை நிலவுக்கதிர் கண்டு கூம்பிவிடும். நிலவுத் திங்கள் கண்டு நெகிழும் அல்லி மலர் ஆதவன் வரவு கண்டதும் முடிவிடும். உலகில் இயல்பாக நிகழும் இக் காட்சியைக் கண்டார் பொய்யா நாவிற் கபிலர் அவர் பழகிய அரண்மனைக் காட்சி அவர் கருத்தில் வந்து நின்றது. அந்தப்புரத்தில் இளவரசி ஒருத்தி தன் தோழியரைப் பார்த்துச் சீற்றங் கொண்டாள். அவள் முகம் சிவந்தது. அதனைக் கண்ட தோழியர் தலைகளைத் தாழப்போட்டு முகங்கவிழ்ந்து நின்றனர். இந்தக் காட்சி புலனழுக்கற்ற அந்தணாளனாம் கபிலர் கருத்திற்பட்டதும்,

“சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்

மடத்தகை ஆயம் கைதொழு தாஅங்கு’

என்று கவிதை பிறந்தது. இணையென எழும் இனிய கற்பனை இது.

பதினான்கு நாள்கள் நிலவு தேய்வதும் பின் பதினான்கு நாள்கள் வளர்வதும் இயற்கை. ஆயிரம் சங்கச் சான்றோர் ஒருவர்க்கு இக் காட்சி-இந் நியமம் குலையா நிகழ்முறை ஒர் அரிய உண்மையினை உணர்த்துகின்றதாம்.