பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி I 3 I

ஆசிரியரைப் போற்றிய விதம் மேலைநாட்டார் கல்வி முறையினின்று முற்றிலும் மாறுபட்டது. இதனைப் பின்வரும் அறநெறிச்சாரப் பாடல்வழி அறியலாம் :

அறங்கேட் டருள்புரிந் தைம் புலன்கள் மாட்டும் இறங்கா திருசார் பொருளும் துறந்தடங்கி மன்னுயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் பன்னுதற்குப் பாற்பட் டவன்”

இத்தகைய நற்பண்புகளை உடைய ஆசிரியர்களிடம் கல்வி பயிலும் மாணவர்களை நன்னுால் ஆசிரியர் மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார்.

அன்னம் ஆவே மண்ணொடு கிளியே இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி என்னல் தலையிடை கடைமா னாக்கர்”

என்னும் நன்னுால் நூற்பா தலை மாணாக்கர்கள், அன்னம், பசு போல்வர் என்றும் இடை மாணாக்கர் நிலம், கிளி போன்று இருப்பர் என்றும் கடையாய மாணாக்கர் இல்லிக்குடம் ஆடு, எருமை, நெய்யரி போன்று இருப்பர் என்றும் கூறுகின்றது.

இதைப் போன்றே சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஆசாரக் கோவை, அறப்பளிச்சுர சதகம் முதலிய தமிழ் அறநூல்கள் நன்மாணாக்கர் இயல்புகளை விளக்குகின்றன.

மாணாக்கன் அன்பால் வழிபடுவான்” என்பது சிறுபஞ்சமூலம் கூறும் செய்தி, மேலும் ஆசிரியர் இரு என்றால் இருந்து, அவர் பாடம் சொல்லும்போது செவி வாயாகவும். நெஞ்சு களனாகவும், பாடம் போற்றுதல் பழைய மரபு. இதனையே,