பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

கின்றக்கால் கிற்க அடக்கத்தால் என்றும் இருந்தக் கால் ஏவாமை யேகார் பெருந்தக்கார் சொல்லிற் செவிகொடுத்து கேட்டீக மீட்டும் வினாவற்க சொல்லொழிந்தக் கால்வி

என்னும் ஆசாரக்கோவைப் பாடலும்,

ஆணாக்கம் வேண்டா தான் ஆசான் அவற்கியைந்த மானாக்கன் அன்பான் வழிபடுவான் மாணாக்கன்

கற்பனைத்து மூன்றும் கடிந்தான் கடியா தான் நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய்0ே

என்னும் சிறுபஞ்சமூலப் பாடலும்,

கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்” என்னும் முதுமொழிக் காஞ்சி அடியும் வலியுறுத்துகின்றன.

ஆசிரியரை வழிபட்டும், பொருள் கொடுத்தும் பல்வகை உதவிகளைச் செய்தும் கல்வி பயிலும் முறை அக்காலத்தில் இருந்தது.

உறறுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்பது புறநானூறு கூறும் செய்தி.

ஆசிரியர்க்கு உதவி ஒன்றும் புரியாமல் கற்றது கல்வி ஆகாது என்னும் கருத்தை,

நேராமல் கற்றது கல்வி அன்றுகே என்னும் முதுமொழிக்காஞ்சி வழி அறிய முடிகின்றது,

தன்மகன் ஆசான் மகனே மன்மகன் பொருள் நனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற் குரைப்பது நூலே4ே

என்னும் நன்னூல் நூற்பாவும் இவண் ஒப்பு நோக்கத் தக்கன.