பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி 1.33

கல்விப் பயன்

கல்வியின் நோக்கம் பண்பாட்டை வளர்ப்பதாய் இருத்தல் வேண்டும். கல்வி கற்றும், மக்கட் பண்பு இல்லாதாரை மரத்துடன் ஒப்பிடுகின்றார் திருவள்ளுவர்.” அதைப்போன்று நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கு கின்ற இறைவனது திருவடிகளைத் தொழாத கல்வியினால் பயன் ஒன்றும் இல்லை என்பது திருவள்ளுவர் கருத்து.”

மனிதன் துரயவனாய் இருத்தலும், கற்றவழி நிற்றலும் கல்விப் பயன்களில் ஒன்று. கற்றபின் நிற்க அதற்குத் தகள் என்பது திருக்குறள். நல்ல நூல்களை ஐயமறக் கற்று பிறர்க்கு உரைப்பதைவிட அவை கூறும் வழிகளை வாழ்வில் பின்பற்றுதலே மிகவும் உயர்ந்தது. இதனை,

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்லே என்னும் திருக்குறள் உணர்த்துகின்றது. இதனை,

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்” என்னும் வெற்றி வேற்கை அடியும் வலியுறுத்துகின்றது.

கல்வியால் அறிவு விளக்கமுறும், சிந்தனை விரியும். இங்ஙனம், மனதில் எழும் நற்சிந்தனைகளைப் பிறர்க்கு எடுத்து உரைத்து மக்களை நல்வழியில் ஆற்றுப்படுத்தல் கற்றவர்களின் கடமை. மனத்தில் தோன்றும் நற்சிந்தனை களை வெளியிட அஞ்சுகின்றவர்கள் கற்ற கல்வியால் பயன் ஏதும் விளையாது. கற்றறிந்த சான்றோர் அவையிலே தமது சிந்தனைகளை வெளியிட்டு மேலும் மேலும் புகழ் பெறுதல் வேண்டும். சான்றோர் அவையைக் கண்டு அஞ்சுபவன் கற்ற கல்வி பயனற்ற கல்வியே. அக்கல்வி அவனைப் புற உலகிற்கு அறிமுகப்படுத்தாது.