பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 34 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சும் அவன் கற்ற நூல் 19 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச் சொல்லா தார்’

என்னும் குறட்பாக்கள் இக்கருத்தை வெளிப்படுத்துகின்றன. சான்றோர் அவையில் போற்றப்படுபவர் கற்ற கல்வியை நல்லவையும் மேம்பட்ட கல்வி, என்று திரிகடுகம் பாராட்டு கின்றது. இவண்,

கழறும் அவையஞ்சான் கல்வி யினிதே’ என்னும் இனியவை நாற்பது அடிகளும்,

அவையஞ்சி மெய்விதிர்ப்பர் கல்வியும் பூத்தலிற் பூவாமை நன்று’

என்னும் நீதிநெறி விளக்கக் கருத்தும்,

ஆஸ்தான கோழை பல அரியநூல் ஒதியென்னா’ என்னும் குமரேச சதக அடியும் ஒப்பு நோக்கத்தக்கன.

மேன்மேலும் கற்க

தமிழ் அறநூல்கள் கல்லியையும் ஒரு செல்வமாகப் போற்றிக் கூறுகின்றன. மேலும், கல்வியையும், செல்வத்தை யும் ஒப்பிட்டுச் செல்வத்தின் நிலையாமையை எடுத்தியம்பிக் கல்வியின் உறுதியைக் கூறுகின்றன, செல்வத்திற்கு எல்லை கூறும் தமிழ் அறநூல்கள் கல்விக்கு அங்ஙனம் எல்லை வகுக்கவில்லை.

நம்மைவிடச் செல்வந்தர்களைத் தம்முடன் ஒப்பிட்டு மென்மேலும் செல்வம் தேட முயலாமல் தம்மைவிடத் தாழ்ந்தவர்களை நோக்கித் தமது செல்வம் பெரியது என்று மகிழ வேண்டும். கல்வியும் ஒருவகைச் செல்வமே ஆயினும்