பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி I35

மேற்கூறிய எல்லை அதற்குப் பொருந்தாது. கற்றறிந்த சான்றோர்களது அறிவுடன் நம் அறிவை ஒப்பிட்டு மேன் மேலும் கற்றல் வேண்டும் என்கின்றார் குமரகுருபரர்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே யிவர்க்கு நாம் என்று’

இங்ஙனம் கற்றலை ஊக்குவிக்கும் தமிழ் அறநூல்கள் கல்விச் செருக்கைக் கடிந்துரைக்கின்றன. கல்வியால் செருக்கித் திரிந்தவர்கள் கற்று அடங்கிய சான்றோர்களிடம் தோல்வியுற்றதையும் தமிழ் நூல்கள் இயம்புகின்றன. அகன்ற வானத்தில் விரிகதிர் வீசும் ஞாயிற்றின் வெப்பத்தி லிருந்து அளவில் சிறிய கைக்குட்டை நம்மைக் காக்கின்றது. அளவில் பலகோடி மடங்கு பெரிய கதிரவனின் சீற்றத்தி லிருந்து சிறிய குடை நம்மைக் காக்க வல்லது. அதைப் போன்று பெரிய கல்வியாளர் அறியாமையை ஒரு சில நூல் களைக் கற்றவர் வாய்ச்சொல்லே போக்க வல்லது. எனவே, கல்விச் செருக்கைக் கைவிடுதல் நல்லது என்கின்றது அறநெறிச்சாரப் பாடல் ஒன்று.

பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா அலகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் சில கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு அச்சாணி அன்னதோர் சொல்??

இங்ஙனம் தமிழ் அறநூல்கள் கல்வி கற்றலை ஊக்கப் படுத்தியும் அதே போழ்து கற்றவழித் தோன்றுகின்ற கல்விச் செருக்கையும் கடிந்துரைக்கின்றன.