பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 36 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

முடிவுரை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி என்னும் இக்கட்டுரையில் கல்வி பற்றிய விளக்கம் முதற்கண் கூறப் பட்டுள்ளது. கல்வியே சிற்றுயிர்க்கு உற்றதுணை; கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து எவ்வுலகிலும் இல்லை. கல்லாதவன் தனக்கே பகைவன் ஆகின்றான் என்னும் கல்வி யின் சிறப்பும் கல்லாமையின் இழிவும் விளக்கப்பட்டன: கற்றற்குரிய பருவம் இளமையே என்பதும் கூறப்பட்டது. எண்ணும் எழுத்துமாகிய கல்வி வகைகளும் கேள்வி வாயிலாகவும் கல்வி பெறலாம் என்பதும் சுட்டப்பட்டன. கல்வி சாதி வேறுபாடுகளைக் கடந்தது. இரந்தும் கூடக் கற்றல் வேண்டும். கல்விக்கு அடிப்படையாகிய ஆசிரியர்மாணவர் நல்வியல்புகள் கல்விப் பயன் ஆகியனவும் சுட்டப் பட்டுள்ளன.

குறிப்புகள்

1. பா. துரைக்கண்ணு முதலியார், கல்விக்கலை,

பக்கம் . 18

2. புறநானூறு, 9, 3. ஏலாதி, 7.4 . 4. நாலடியார் 1. 5. திருக்குறள், 407. 6. திரிகடுகம், 52. 7. திருக்குறள், 398. 8. நீதிநெறிவிளக்கம், 4. 9. மணிமேகலை, 18 : 165. 10. சிலப்பதிகாரம் , 23 : 37.9. 11. நான்மணிக்கடிகை , 103. 12. நாலடியார், 2.

13. திருக்குறள், 397