பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி: வானவர் விழையு மாட்சியார் தேயம்!

என நம் பாரத நாட்டைப் பாடிப் பரவினார் கவியரசர் பாரதியார். ஞான மெய்ப்பூமியாகிய இந்நாட்டில் காலந் தோறும் அருளாளர் பலர் தோன்றி மக்களை நன்னெறியில் .ெ ச லு த் தி அருந்தொண்டாற்றிச் சென்றுள்ளனர். குறிப்பாக, தமிழ் நாட்டில் பழம்பெரும் சமயமாம் சைவ சடாயத்தை மக்களிடையே பரப்பும் பணியில் பலர் ஈடுபட்டனர். அவர்களுள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வரும் குறிப்பிடத்தக்கவர்கள். சைவத்தின் பெருமையை மக்கள் மறந்திருந்த வேளையில் இப்பெருமக்கள் தோன்றினர்; நற்றமிழின் துணையோடு நன்னெறியாம் சைவ நெறியை நாளும் பரப்பினர். மக்களை யும் சமயத் தொண்டாற்ற அழைத்தனர். மக்களின் துணையாலே சைவ சமய மறுமலர்ச்சியை உருவாக்கினர். இந்நால்வரும் தோன்றியிராவிடில் சைவ சமயத்தின் பெருமையும், திருநீற்றின் பெருமையும் ஐந்தெழுத்தின் பெருமையும் வீழ்ச்சி பெற்றிருக்கும் என்னும் கருத்தில்,

சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமெஞ் சுந்தரனுஞ் சிற்கோல வாதவூர்த் தேசிகரும்-முற்கோலி வந்திலரேல் நீறெங்கே மாமறை நூலெங்கே எந்தைபிரா னஞ்செழுத்தெங் கே!