பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

என்னும் பாடல் ஒன்று வழங்கப் பெறுகின்றது. இந் நால்வருள், ஞான மார்க்கத்தைப் பின்பற்றி இறைவனை வழிபட்டு, சைவத்தின் பெருமையை நிலைநாட்டி, தோணிபுரத் தோன் ற ல் என அழைக்கப்பெறும் திருஞானசம்பந்தர் குறிப்பிடத்தக்கவர். தன்னலம் சிறிதும் பேணாது மக்களின் நலனுக்காகவே இறைவனை வழிபட்ட பெருமை சம்பந்தருக்கு உண்டு. அவர் தம் கவிதையாகிய கனியிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாற்றின் சாரம், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்பது. மானிட வாழ்க்கையின் அடித்தளமாக அமைந்த நம்பிக்கை ஒளியூட்டும் வாழ்வியல் கருத்தாக இதனைக் கருதலாம். இச்றெந்த உண்மையைச் சீருற உணர்ந்து செப்பிய அச் செம்மலின் திறத்தை ஒவ்வொருவரும் அறிதல் இன்றியமை யாதது.

சோழவள நாட்டில், தில்லையென்னும் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சீகாழிப் பதியில் சிவபாத இருதயர் என்னும் சிவபக்தருக்கும் பகவதியார் என்னும் அம்மையார்க்கும் சம்பந்தர் பிறந்தார். கவுணிய மரபில் அந்தணர் குலத்தில் தோன்றிய சம்பந்தரின் பிறப்பே ஒரு குறிக்கோளை உட் கொண்டது என்பதைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

வேதநெறி தழைத்தோங்க

மிகு சைவத்துறை விளங்கப் பூதபரம் பரை பொலியப்

புனிதவாய் மலர்ந்தழுத பூதவள் வயற்புகலித்

திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு

திருத்தொண்டு பரவுவாம்

(பெரியபுராணம் : )