பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உன்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்’

575ಹT5 கவிதை பிறக்கின்றது. துன்பம் வரும்போது துவண்டு விடாமலும், இன்பம் வரும்போது இறுமாந்து விடாமலும் இருக்க வேண்டும் என்ற உயர்பேரறத்தை இக் கவிதையடிகள் விளக்கி நிற்கின்றனவன்றோ!

இனித் திணைகளுக்குப் பெயரமைந்த காரணத்தினைச் சுட்டி மேற்செல்வாம். பன்னிரண்டாண்டிற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கொண்டு மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சிநிலத்திற்குக் குறிஞ்சி’ என்றும், கார்காலத்தே மாலை நேரத்தே மலரும் முல்லை மலர்கொண்டு காடும் காடு சார்ந்த முல்லை நிலத்திற்கு முல்லை’ எனறும், வளஞ் சார்ந்த வயற்புறங்களில் வளரும் மருதப்பூக்கள் காரணமாக வயலும் வயல்சார்ந்த மருதநிலத்திற்கு மருதம்’ என்றும், நெய்தலங்கானலில் நெகிழ மலர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள் கொண்டு கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்திற்கு நெய்தல்’ என்றும் பெயரிட்டுச் சங்கச் சான்றோர் கவிதை புனைந்திருப்பது தமிழர்தம் மலர்ப் பண்பாட்டினை உணர்த்தி நிற்பதாகும். பிறப்புத் தொடங்கி இறப்புவரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நிகழ்ச்சியிலும் இன்றியமையாப் பங்கு பற்றும் மலர்கள் திராவிட நாகரிகத் தின் தனிக்கூறுகளுக்கு விளக்கங்காட்டி நிற்பதாக அறிஞர் தனிநாயக அடிகளாரும், அறிஞர் சுந்தரகுமார சாட்டர்ஜி யும் அறைவர்.

அகம் புறம் எனும் பொருள்கள் சங்க இலக்கியம் உணர்த்தும் சால்புகள் எனலாம். காதலும் போரும் சங்க இலக்கியங்களின் சாரம் என்பர் பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளை அவர்கள். காதலைப் பேசாத மொழியும்