பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 14 I

என்னும் பாடலில் வேதநெறி தழைத்தோங்கவும் சைவ சமயம் வளர்ச்சி பெற்று விளக்கமுறவும் அவர் திருவவதாரம் செய்தார் எனத் தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.

பிறையென வளர்ந்து, செங்கீரையாடி, சப்பாணி கொட்டி, குழந்தைப் பருவத்தைக் கடந்து மூன்று வயதை எட்டினார் சம்பந்தர். அப்பொழுதே இறையுணர்வு அவர் பால் தலைகாட்டலாயிற்று. இறைவனோடு தமக்கு நெருங்கிய தொடர்பிருப்பதை அவர் உணர்ந்தார். அதனை ஊரார்க்கு வெளிக்காட்டும் வாய்ப்பொன்று கிடைத்தது ஒரு நாள் சிவபாத இருதயர் நீராடச் சென்றபோது சம்பந்தர், தாமும் உடன்வருவதாகக் கூறி அவர் பின்னே சென்றார். தந்தை நீராடிக் கொண்டிருக்கும் பொழுது, சம்பந்தர் பெருமான் இறையுணர்வு தூண்டலால் அழத் தொடங்கினார். அவரது அழுகை பெருகியது. தோணிபுரத்தீசன் குடிகொண்டிருக்கும் கோவிலின் சிகரத்தை நோக்கியவாறு அழுதார். கருனைப் பெருங்கடலாம் சி வ .ெ ப. ரு ம .ா ன் அழும் பிள்ளையை அரவணைக்க எண்ணி ஆங்கு எழுந்தருளி, உமையம்மை யிடம் நினது பாலை அழுகின்ற இப்பிள்ளைக்கு ஊட்டு என வேண்டினார். உமையவளும் அவ்வாறே செய்தாள். பிள்ளை சம்பந்தரின் பெருகிய அழுகை நின்றது. இதற்குள் சிவபாத இருதயர் குளித்து முடித்துக் கரையேறினார். தம் பிள்ளை வாயிலும் இதழோரத்திலும் பாலொழுக நி ற் கு ம் காட்சியைக் கண்ட அவர் பிள்ளையிடம் , உனக்குப் பால் புகட்டியவர் யார்? ,என அச்சுறுத்தி வினவினார். சம்பந்தப் பெருமான் உடனே,

தோடுடைய செவியன் விடையேறியோர் துவெண்மதி சூடிக் காடுடைய சுட லைப்பொடி பூசியென் னுள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைகாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடைய பிர மாபுரமேவிய பெம்மானி வனன்றே

(பதிகம் 1 பாடல் 1)