பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 42 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

என்ற பாடலைப் பாடி எனக்கு இதைச் செய்தவன் இங்கிருக்கும் இறைவனாகிய சிவபெருமானே’ என விடை யிறுத்தார். இவ்வாறு மூன்று வயதிலேயே அருந்தமிழில் சவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்ததோடு, அச்சிறுபருவத்தி லேயே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவராகவும் சம்பந்தர் விளங்கினார். இறைவன் விரும்பி ஆட்கொண்ட காரணத்தால் ஆளுடைய பிள்ளை’ என்னும் பெயராலும் சம்பந்தர் அழைக்கப்படுகின்றார்.

இறையருள் வாய்த்ததை எண்ணி இறும்பூதெய்திய சம்பந்தர் வாழ்நாள் முழுதும் இறைவனைப் பாடி வழிபட முடிவு மேற்கொண்டார். ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வணங்கவும், அதன்மூலம் சமயத் தொண்டு நிகழ்த்தவும் உறுதி பூண்டார். அவ்வண்ணமே அவர் பல திருப்பதிகங்களுக்குச் சென்றபோது, திருக் கோலக்கா என்னும் ஊரில் இறைவனால் பொன்தாளம் வழங்கப்பட்டார். இந்நிலையில் யாழிசையில் வல்லவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தொடர்பு சம்பந்தருக்கு ஏற்பட்டது. தமது பாடல்களை யாழில் இசைக்கும் உரிமையைத் திருநீலகண்டர்க்கு வழங்கினார். அதுமுதல் இருவரும் பல திருத்தலங்களுக்கு நடந்தே சென்று பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டனர். இச்சிறுவயது பாலகன் பாதம் நோகப் பல ஊர்களுக்கும் நடந்து செல்வதைப் பொறாத கண்ணுதற்கடவுள், திருநெல்வாயில் அரத்துறை என்னும் ஊரில் சம்பந்தருக்கு முத்துச் சிவிகையும் முத்துச் சின்னமும் முத்துக்குடையும் வழங்கி அருளினார். சம்பந்தர்,

எந்தை யிசனெம் பெருமா னேறமர் கடவுளென்றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால் கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல் அந்தண் சோலை நெல்வாயி லரத்துறை யடிகடம் மருளே

(பதிகம் 226 பாடல் 1) என்னும் பாடலைப்பாடி அவற்றையேற்றுக் கொண்டு தொடர்ந்து பல தலங்களுக்கும் சென்றுவழிபட்டார்.